வன்மத்தை கக்கும் போட்டியாளர்கள்...Kill Or Stay டாஸ்க்கை வைத்து கலங்கடித்த பிக்பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி மேடைக்கு செல்ல ஒருவர் மட்டும் தெரிவு செய்யப்படும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் டாஸ்க் 3 kill or stay அரங்கேறி வருகின்றது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தற்போது 85நாட்களை கடந்து செல்கின்றது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரவீனா, மணி சந்திரா, மாயா, தினேஷ், நிக்ஷன், விஷ்ணு என 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இன்றைய தினம் இறுதி மேடைக்கு முதல் ஆளாக செல்லும் போட்டியாளரை தேர்வு செய்வதற்கான டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் டாஸ்க் 3 kill or stay அரங்கேறி வருகின்றது.
இதில் இறுதி மேடைக்கு முதல் ஆளாக செல்லும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.