“உன் அப்பாவை போட்டுறு..” நண்பரின் மெசேஜ்.. இளம் நடிகை HAPPY..!
பிரபல நட்சத்திர தம்பதியான சேத்தன்-தேவதர்ஷினி ஆகியோரின் மகளும் பிரபல இளம் நடிகை நியத்தி கடம்பி தன்னுடைய தந்தை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியதாவது, ஒருமுறை என்னுடைய நண்பர்கள் என் அப்பாவை போட்டு தள்ளிடு.. அவர் வேண்டாம்.. ரொம்ப மோசமானவர்.. என்று எல்லாம் எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள்.
அப்போது இது குறித்து என்னுடைய அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் சொல்வது சரிதான். அவர்கள் பயப்படும் அளவுக்கு என்னுடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
அப்படி என்றால் அந்த கதாபாத்திரத்தை நான் சிறப்பாக செய்திருக்கிறேன் என அர்த்தம் என்று பதில் அளித்தார். விடுதலை திரைப்படத்தில் மோசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சேத்தன்.
இந்த படத்தை பார்த்த பிறகு அவருடைய மகளான நியத்தி கடம்பிக்கு அவர்களுடைய நண்பர்கள் இப்படியாக மெசேஜ் செய்திருக்கிறார்கள்.
இதற்குத்தான் சேத்தன் இப்படி பதில் கொடுத்து இருக்கிறார். தொடர்ந்து பேசிய நியத்தி.. இப்படியான கமெண்ட்கள் வரும்போது எனக்கு ஆரம்பத்தில் பயமாக இருந்தது. ஆனால், தற்போது ஹாப்பியாக இருக்கிறது.
நாம் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறோம். அவர்கள் நம் மீது நிஜமாகவே கோபப்படும் அளவுக்கு அதனுடைய தாக்கம் இருந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என பேசி இருக்கிறார்.