ஹோட்டல் அறையில் நடிகையை கட்டுப்பிடித்த ரூம் பாய்!! சென்னையில் நடந்த சம்பவம்..

ஹோட்டல் அறையில் நடிகையை கட்டுப்பிடித்த ரூம் பாய்!! சென்னையில் நடந்த சம்பவம்..

கேரளாவை சேர்ந்த 26 வயதான நடிகை ஒருவர், சென்னையில் நடைபெற்று வரும் சினிமா ஷூட்டிங் தொடர்பாக மாம்பலம் தாமஸ் சாலையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் மாலையில், நடிகையின் ரூமிற்கு இண்டர்காம் தொலைபேசி வேலை செய்யவில்லை என்று புகாரளிக்க ஹோட்டல் ரிசப்ஷன் பகுதிக்கு நேரடியாக சென்று மீண்டும் ரூமிற்கு வந்துள்ளார். கொஞ்ச நேரத்தில் நடிகையின் அறைக்கதவை ஒரு நபர் தட்டியபோது கதவை நடிகை திறந்துள்ளார். அப்போது வரவேற்பறையில் சொல்லப்பட்ட புகாரின் அடிப்படையில் தொலைபேசியை சரி செய்ய வந்திருப்பதாக அந்நபர் கூறியிருக்கிறார்.

ஊழியர் என்று நம்பி நடிகையும் அவரை ரூமிற்கு நுழைய அனுமதித்தார். ஆனால் நபர் தொலைபேசியை சரி செய்வதுபோல் நீண்ட நேரம் அங்கேயே நடித்துக் கொண்டிருந்துள்ளார். திடீரென அந்நபர் நடிகையிடம், நீங்கள் நடிகை தானே, உங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாமா? என்ற் கேட்டுள்ளார்.

நடிகை சம்மதிக்கவில்லை, இருந்தாலும் அந்த நபர் விடாபிடியாக செல்பி எடுத்தே தீருவேன் என்று அடம்பிடித்துள்ளார். நடிகையோ சரி என்று ஒத்துக்கொண்ட நிலையில், செல்பி எடுப்பதுபோல் நடிகைக்கு மிகவும் நெருக்கமாக வந்து அவரை திடீரென கட்டிபிடித்ததோடு, அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றிருக்கிறார்.

இதனால் நிலைதடுமாறிய நட்கை பயத்தில் சத்தமிட்டு கூச்சலிட்டு உடனே அறையை விட்டு தப்பியோடினார். பாதிக்கப்பட்ட நடிகை உடனே போலிஸ் கட்டுப்பாட்டு ரூமிற்கு தகவல் தெரிவித்ததில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், ஹோட்டலில் இருந்த அந்தநபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

குற்றவாளி கல்லூரி மாணவர் என்பதால் அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எச்சரித்து அனுப்ப போலிசார் முயன்றனர். அதற்கு நடிகை தெரிவித்து, ஒரு பெண்ணாக எனக்கு நேர்ந்த இந்த அத்துமீறலை சட்டப்படி சந்திக்க விரும்புகிறேன் என்று உறுதியாக இருந்துள்ளார்.

அதனால் மாம்பலம் காவல்நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் நாகப்பட்டினத்தை சேர்ந்த 20 வயதான சையது அப்ரிடி என்பவரை கைது செய்தனர். ஆனால், அவர் ஒரு கல்லூரி மாணவர் என்பதால் எச்சரித்து, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி அனுப்பியுள்ளனர். இதற்கும் நடிகை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES