44 வயதில் அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான தகவல்..

44 வயதில் அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான தகவல்..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து ரசிகர்களின் மனதில் தனக்கான ஒரு தனி இடத்தினை பிடித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படத்திற்கு பின் பெரிய படங்கள் மூலம் உலகளவிலும் ரசிகர்களை பெற்ற அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்புக்களை இழந்து மார்க்கெட்டையும் இழந்தார்.

44 வயதில் அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான தகவல்.. | Anushka Shetty To Marry A Businessman News Viral

சில வருட இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய அனுஷ்கா, 44 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் பிரபாஸுடன் காதலில் இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் கிசுகிசுக்கள் எழுந்தது. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று இருவரும் விளக்கமும் கொடுத்துவிட்டனர்.

40 வயதை தாண்டிய அனுஷ்காவிடம் பலரும் உங்களுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வி தான் கேட்டு வருகிறார்கள்.

44 வயதில் அனுஷ்கா ஷெட்டிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான தகவல்.. | Anushka Shetty To Marry A Businessman News Viralஇந்நிலையில் தெலுங்கு மீடியாக்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, அனுஷ்காவுக்கு இந்த வருடம் திருமணம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார் என்றும் அந்த நபர் அனுஷ்காவின் குடும்பத்திற்கு தூரத்து உறவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரு குடும்பங்களும் இந்த விஷயத்தில் பேசி முடிவு செய்யும் கட்டத்தில் இருப்பதாகவும் திருமண ஏற்பாடுகள் குறித்து ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் அனைத்து தற்போது வரை வதந்தியாக மட்டுமே இருப்பதால் அனுஷ்கா மற்றும் அவரது குடும்பம் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலை அறிவிக்கவில்லை. அதனால், உண்மையில் திருமணம் நடக்கிறதா? இல்லையா என்பது உறுதியாக வேண்டும் என்றால் அனிஷ்கா தரப்பில் இருந்து அறிவிப்பு வந்தால் தான் எது உண்மை? வதந்தி என்று தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்க்து.

LATEST News

Trending News