இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.
எம்மை வளர்த்துக் கொள்வதற்காக, என்றைக்குமே சமூகத்தை வீணடிக்கும் அல்லது தப்பாக வழிகாட்டும் செயல்களில் (எம்மை அறிந்து) ஈடுபட்டதில்லை என்கிற மனத்திருப்தியோடு பயணிக்கின்றோம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லித் திருப்தி கொள்வோம். இந்த மனத்திருப்தியும், நம்பிக்கையுமே எங்கள் பலத்தின் ஆதாரம் .
ஒரு தவம் போல் தொடரும் எமது ஊடகப் பயணத்தினை, எவ்வளவோ இடர்களைச் சந்தித்தே கடந்திருக்கிறோம். இனியும்அவைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வோம். அதற்கான ஆதாரமாக, எமைத் தொடரும் வாசகர்களாகிய நீங்கள் இருக்க வேண்டும். எமது, படைப்புக்கள், ஊடக நடவடிக்கைகளில் தவறுகள், கருத்துக்கள் இருப்பின் எந்தவித தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே, எம்மை இன்னும் வளப்படுத்த உதவும்.
- என்றும் மாறா இனிய அன்புடன்
யாழ்ஓசை குழுமத்தினர்