திரிஷா சர்ச்சை இருக்கட்டும்!! காதல் கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் சொன்ன பதில்..

திரிஷா சர்ச்சை இருக்கட்டும்!! காதல் கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் சொன்ன பதில்..

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், சமீபத்தில் விஜய் - திரிஷா விவகாரத்தில் பேசிய கருத்துக்கள் பலராலும் கவனிக்கப்பட்டு பேசுபொருளாக மாறி வருகிறது. சமீபத்திய நிகழ்ச்சியொன்றில், திரிஷா புகைப்படத்தை பார்த்து இந்த குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்கக்கணும் என்று பேசியிருந்தார்.

இதற்கு திரிஷா மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து பார்த்திபன் அதற்கு 2 வீடியோக்களை பகிர்ந்து விளக்கம் கொடுத்தார். இந்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், பார்த்திபன் பேசிய மற்றொரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

திரிஷா சர்ச்சை இருக்கட்டும்!! காதல் கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் சொன்ன பதில்.. | Parthiban Viral Again After Remarks On Loveஅதில், பிரிக்க முடியாதது என்ன? என்ற கேள்விக்கு, காதலும் கள்ளக்காதலும் என்று பதிலளித்தார். மேலும் பிரியக்கூடாதது என்ன என்றதற்கு நம்முடைய குழந்தைகளும் நம்முள் இருக்கும் குழந்தைத்தனமும் என்றும் பாட்டுக்கு யார் என்ற கேள்விக்கு சிரித்தபடி, நான் தான் என்று கூறினார்.

பின் நான் பாட்டுக்கு ஏதாவது பேசிட்டு போயிருவேன் இல்ல, அதனால்தான் சொன்னேன் நான் தான் என்றார். சேர்ந்தே இருப்பது என்ன என்ற கேள்விக்கு நமக்கு பிடித்தவர்களுடைய நினைவுகள் தான், நாம் அவர்களுடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்றாலும் அந்த நினைவுகள் நம்முடன் இருக்கும்.

திரிஷா சர்ச்சை இருக்கட்டும்!! காதல் கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் சொன்ன பதில்.. | Parthiban Viral Again After Remarks On Loveஎன் மனதிற்குள்கூட 30 வருடங்களாக ஒரு பெண்ணுடைய நினைவு இருந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு பெண்ணை தொட்டு, அவருடன் வாழ்ந்து தான் காதல் இருக்க வேண்டும் என்று இல்லை, எங்கோ நீ இருந்தாலும் உன்னுடைய நினைவுகள் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். அந்த நினைவுகள்தான் நம்முடன் சேர்ந்து இருக்கும் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News