தனுஷ் படத்தில் நடிக்க சாய் பல்லவி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
இந்திய சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தற்போது ராமாயணா, Ek Din ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதுமட்டுமின்றி கல்கி இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனுக்கு பதிலாக சாய் பல்லவிதான் கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் தனுஷின் 55வது படத்தில் சாய் பல்லவி இணைந்தார்.

இப்படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவி ரூ. 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் சாய் பல்லவி.