வடிவேலு கட்டிய புதிய வீடு.. உள்ளே செதுக்கிருக்காரு.. வைகை புயல் வேற லெவல்

வடிவேலு கட்டிய புதிய வீடு.. உள்ளே செதுக்கிருக்காரு.. வைகை புயல் வேற லெவல்

சென்னை: வைகை புயல் என்று கொண்டாடப்படும் வடிவேலு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் பேங் பேங், D56 ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் புதிய வீடு கட்டியிருக்கிறார். அதில் ஏகப்பட்ட விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

வடிவேலு கடந்த 2011ஆம் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்தார். அதற்கு பிறகு அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைந்து ஒருகட்டத்தில் திரைத்துறையிலிருந்தே ஒதுங்கினார். தொடர்ந்து அவரை சுற்றியிருக்கும் பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்பட்டதால்; நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அது சரியாக போகவில்லை.
 

Vadivelu s New House 100 Crore Home With Traditional Design Solar Panels and Modern Facilities

மாமன்னன், மாரீசன் வடிவேலு: அப்படத்துக்கு பிறகு சந்திரமுகி 2, மாமன்னன், மாரீசன் ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் மாரீசன், மாமன்னன் படங்களுக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்தது. அந்த இரண்டு படங்களிலுமே முழுக்க முழுக்க வேறு வடிவேலுவை காட்டியிருந்தார்கள் இயக்குநர்கள். பல வருடங்கள் கழித்து வடிவேலுவை அப்படி ஒரு கேரக்டரில் பார்த்தது ரசிகர்களிடமும் வெகுவாக கனெக்ட் ஆனது. அடுத்ததாக பேங் பேங், D56 ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

தனுஷூடன் முதல் படம்: வடிவேலு திரைத்துறைக்கு வந்து 20 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. இத்தனை வருடங்கள் அவர் பெரும்பாலான ஹீரோக்களோடு நடித்துவிட்டார். ஆனால் தனுஷூடன் மட்டும் நடிக்கவில்லை. படிக்காதவன் படத்திலேயே நடித்திருக்க வேண்டியதுதான்; சில காரணங்களால் நடக்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து தனுஷுடன் சேர்ந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

வடிவேலுவின் புதிய வீடு: இந்நிலையில் புதிய வீடு கட்டியிருக்கிறார் அவர். பழ்ங்கால முறையில் திண்ணை வைத்து கட்டப்பட்டிருக்கும் வீட்டில்; சிறிய அளவிலான பிள்ளையார் சிலை ஒன்று இருக்கிறது. மேலும், சப்போட்டா, வாழை, நெல்லிக்காய், தென்னை, பலா ஆகிய செடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் சோலார் பேனலும் வைக்கப்பட்டிருக்கிறது.

மின்சாரம் போய்விட்டால் இன்வெர்ட்டர் வசதி, சிசிடிவி கேமரா, கார் பார்க்கிங் உள்ளிட்டவைகளும், வீட்டுக்குள்ளேயே வடிவேலுவின் அலுவலகம் என அனைத்து வசதிகள்ம் உள்ளே இடம்பெற்றிருக்கின்றன. வெளியிலிருந்து வருபவர்கள் அமர்வதற்கு வசதியாக விசாலமான இடம் ஒன்றும் இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த வீட்டின் மதிப்பு 100 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
 

LATEST News

Trending News