பெண்ணிடம் அப்படி கேட்டேனா!! பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உருக்கமான விளக்கம்..

பெண்ணிடம் அப்படி கேட்டேனா!! பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உருக்கமான விளக்கம்..

பட்டிமன்ற பேச்சாளரும் நடிகருமான ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கடந்த பிப்ரவை 3 ஆம் தேதி செவ்வாய்கிழமை நடந்த தமிழ் சங்க விழாவிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு சமைத்து வழங்கும் பொறுப்பை கார்த்திகேயன் என்பவரின் தங்கை ஏற்றிருந்தார். அவர் தனது அனுபவத்தை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

பெண்ணிடம் அப்படி கேட்டேனா!! பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உருக்கமான விளக்கம்.. | Pattimandram Raja Explains Women Issues

இதுகுறித்து கார்த்திகேயன் வெளியிட்ட பதிவில், தன்னுடைய தங்கை மிகுந்த ஆர்வத்துடன் உணவு சமைத்து சென்றார். அப்போது ராஜா அங்கிருந்தவர்களிடம் ஊர் பெயர்களை கேட்டு அவர்களின் சாதியை ஊகிக்க முயன்றுள்ளார். காரைக்குடி என்று பதிலளித்த தங்கையிடம், நீங்கள் செட்டியாரா? என்று கேட்டதுடன் இல்லாமல், அவர் அமைதியாக இருந்தபோதும் நீங்கள் வேறு என்ன ஆட்கள் என்று மீண்டும் மீண்டும் துருவிதுருவி கேட்டார்.

சாதிய அடையாளங்களை கடந்து வாழ்வதற்காக வெளிநாடு சென்ற இடத்தில் தமிழகத்தில் இருந்து வந்த ஒரு புகழ்பெற்ற பேச்சாளர் இத்தனைய செயலில் ஈடுபட்டதால் என் தங்கை மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியதாகவும் அவர் கண்ணீர்விட்டு அழுததாகவும் கார்த்திகேயன் அந்த பதிவில் தெரிவித்தார்.

பெண்ணிடம் அப்படி கேட்டேனா!! பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உருக்கமான விளக்கம்.. | Pattimandram Raja Explains Women Issues

இதுதொடர்பாக இணையத்தில் பேசுபொருளானதனை தொடர்ந்து ராஜா ஒரு வீடியோ மூலம் விளக்கத்தை அளித்துள்ளார்.

அதில், உணவு மிகவும் ருசியாக இருந்ததால் அது செட்டிநாட்டு முறைப்படி சமைக்கப்பட்டதா என்பதை அறியவே செட்டிநாடா? என்று கேட்டேன், மற்றபடி செட்டியாரா என்ற சாதிரீதியாக நான் கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News