பிக் பாஸில் காதலில் சிக்கிய 4 ஜோடிகள்! தனியாக ஆட்டம் ஆடும் பவித்ரா நடக்கப்போவது என்ன?

பிக் பாஸில் காதலில் சிக்கிய 4 ஜோடிகள்! தனியாக ஆட்டம் ஆடும் பவித்ரா நடக்கப்போவது என்ன?

தற்போது ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 50 வது நாளை நெருங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்களுக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் கடந்த 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது 8வது சீசன் நடந்துகொண்டு வருகின்றது. இதை முதன் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆரம்பத்தில் ஆண்கள் பெண்களாக மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர்.

மேலும் இதில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் 6 பேர் கலந்துகொண்டுள்ளனர். தற்போது வீட்டிற்கு நடுவில் கோடு போட்டு அந்தப் பக்கம் பெண்கள் இந்தப் பக்கம் ஆண்கள் அணி என இருவேறாக பிரித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் கிட்டத்தட்ட 40 நாட்களாக ஆண்கள் அணி ராஜ்ஜியம் பண்ணிக் கொண்டிருந்த சமையல் பக்கம் தற்போது பெண்கள் அணி கையில் போயுள்ளது. கிட்டதட்ட நாற்பது நாட்களை கடந்து சென்ற நிலையில் school task கொடுத்ததில் இருந்து பெண்கள் அணி ஆண்கள் அணி மீது க்ரஷ் ஆக உள்ளனர்.

அந்த வகையில் தர்ஷிகாவிற்கு விஷால் மீது இருக்கும் காதலை வெளிப்படுத்தி இருந்தார், அடுத்து ஜாக்லீனுக்கு, முத்து மீது ஒரு நல்ல அபிப்ராயம் வந்துள்ளது. ஜாக்குலின் தர்ஷிதாவிடம் முத்து பார்வை ஏதோ கிரங்கடிக்க வைக்கிறது. 

பெண்களை பார்க்கும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. அவரைப் பார்த்தால் ஏதோ ஒரு உணர்வு தோன்றுகிறது என்று கூறியிருந்தார். அடுத்து எல்லோரும் எதிர்பார்த்தது தான் ரயான், சௌந்தர்யாவை விட்டு விலகுவதே இல்லை. 

அதற்கு ஏற்ற மாதிரி சௌந்தர்யாவும் பின்னாடியே அலைய ஆரம்பித்து விட்டார். எங்கே போனாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து வர்ஷினி அருண் மீது க்ரஷ் இருப்பதாக எல்லோர் முன்னிலையிலும் கூறிவிட்டார். இப்படி பிக் பாஸ் வீட்டில் காதல் ஜோடிகள் உருவாகி உள்ளனர். இனிமேல் இந்த பிக் பாஸ் வீடு எப்படி இருக்கப்போகின்றது என்பது ரசிகர்கள் மத்தியில் எதிபார்பாக இருக்கிறது.  

இப்படி காதல் ஜோடியாக ஒவ்வொருவரும் சுற்றிவரும் நிலையில் ராஜா ராணி டாஸ்கில் பவித்ரா தீபக் பிரமாதமாக விளையாடி வருகின்றனர். மக்களின் எதிர்பார்ப்பு படி காதல் ஜோடிகளை விட பவித்ரா அதிக ஓட்டுக்களை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES