72 வயதிலும் குறையாத கமலின் அதிரடி! ‘சண்டியர்’ என பெயரிடப்பட்ட புதிய படம்... வெளியானது டைட்டில்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
'சித்தா', 'வீர தீர சூரன்' போன்ற திரைப்படங்களை இயக்கிய சு. அருண் குமார் இப்படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு 'சண்டியர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே வெளியான கமல்ஹாசனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கையில் அரிவாளுடன் காணப்பட்ட அவரது தோற்றம் இப்படம் அதிரடியான கதைக்களத்தில் உருவாகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது.
மேலும், கமல்ஹாசனின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த டைட்டில் அறிவிப்பு ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
இயக்குநர் அருண் குமார் மற்றும் கமல்ஹாசன் முதன்முறையாக இணையும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.