மீண்டும் கலாய்க்க வருகிறார் மிர்ச்சி சிவா! 8 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தமிழ்ப்படம் 3’... இந்த முறை யாரெல்லாம் சிக்கப்போகிறார்களோ?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களையும், ஹீரோயிசத்தையும் கலாய்த்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் ‘தமிழ்ப்படம் 2’. தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவா ஏற்கனவே படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்திய தகவல்களின்படி படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் பாகத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் படங்கள், ஹீரோக்களின் பஞ்ச் வசனங்கள், மாஸ் காட்சிகள் என அனைத்தையும் கலாய்க்க சிவா தயாராகி வருகிறார்