பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

Jailer 2 worldwide 17 days collection: ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் விவரங்களை நாம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 17 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 

ஜெயிலர் 2

நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் ஜெயிலர். மாஸ் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்க, உலகளவில் ரூ. 635 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

 

பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 17 Days Box Office

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது என்கிற கேள்வி ரசிகர்களால் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க கடந்த ஆண்டு ஜெயிலர் 2 அறிவிப்பு வீடியோ மாஸாக வெளியானது. அன்றிலிருந்து இப்படத்தின் மீது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

 

பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 17 Days Box Office

அத்தகைய எதிர்பார்ப்புடன் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் 2, ரஜினி ரசிகர்களால் மட்டுமின்றி உலகெங்கும் குடும்பம் குடும்பமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்கிற விவரங்களை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 17 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 17 நாட்களில் ஜெயிலர் 2 உலகளவில் ரூ. 795 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 17 Days Box Office

தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாக ஜெயிலர் 2 அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை ரூ. 795 கோடி உலகளவில் வசூல் வந்துள்ள நிலையில், ரூ. 1000 கோடி என்கிற இலக்கை இப்படம் எட்டுகிறது, தமிழ் சினிமாவிற்கு அந்த பெருமையை தேடி தருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News