தெய்வமகள் நடிகை வாணி போஜனின் பர்த்டே கிளாமர் கிளிக்ஸ்..
வாணி போஜன்
தொலைக்காட்சி செய்திவாசிப்பாளராக பணியாற்றி பின், வெள்ளித்திரையில் ஓர் இரவு என்ற படத்தில் இவந்திகா என்ற ரோலில் நடித்து அறிமுகமாகியவர் தான் வாணி போஜன். அதன்பின், சின்னத்திரையில், ஆஹா, மாயா போன்ற சீரியல்களில் நடித்து அறிமுகமாகினார்.
இதனைதொடர்ந்து 2013 - 2018 ஆண்டுகளில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தெய்வமகள் சீரியலில் சத்யா ரோலில் நடித்தார்.

இந்த சீரியலின் வெற்றிய தொடர்ந்து, ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ, அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், மகான், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், அஞ்சாமை, கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
ஒருசில படங்களில் நடித்து வரும் வாணி போஜன், நாளை அக்டோபர் 28 ஆம் தேதியோடு 38வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். பர்த்டே ஸ்பெஷலாக, தற்போது கருப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.