கொடுமை.. பாதியாக குறைந்த சப்ஸ்கிரைபர்கள்.. மார்பில் டாட்டூ போடும் அளவுக்கு இறங்கிய இன்ஸ்டா பிரபலம்!

கொடுமை.. பாதியாக குறைந்த சப்ஸ்கிரைபர்கள்.. மார்பில் டாட்டூ போடும் அளவுக்கு இறங்கிய இன்ஸ்டா பிரபலம்!

திருவனந்தபுரம்: 'Purple Halcyon' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பிரபலமான கேரளாவைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் அஸ்வினி, அதிரடியாக 25 ஆயிரம் சப்ஸ்கிரைபர்களை அதிகரித்து மாதம் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்து வருவதாக வெளியான செய்திகள் இந்தியளவில் டிரெண்டாகின.

ஆனால், அதே சமயம் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் சிக்கிய அவர், தனது சப்ஸ்கிரைபர்களை தற்போது பெருமளவில் இழந்துவிட்டார். மீண்டும் சப்ஸ்கிரைபர்கள் ஏற்றத்தான் சமீபத்தில் அஸ்வினி மார்பில் டாட்டூ போடும் வீடியோவையே வெளியிட்டுள்ளார் என நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பெரிதாக இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் இல்லையென்றாலும், சப்ஸ்கிரைபர்கள் மூலமாக இன்னமும் அவர் பல லட்சம் சம்பாதித்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

யார் இந்த அஸ்வினி?: பயணம், ஆடை வடிவமைப்பு மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த கன்டென்ட்களை உருவாக்கும் மாடலான அஸ்வினிக்கு இன்ஸ்டாகிராமில் 3 லட்சம் ஃபாலோயர்கள் தான் உள்ளனர். ஆனால், இன்ஸ்டாகிராமின் 'சந்தா' (Subscription) வசதியைப் பயன்படுத்தி தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இன்ஸ்டாகிராம் சந்தா முறையில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார். அவர் மாதம் தோறும் சுமார் ₹390 கட்டணத்தில் எக்ஸ்க்ளூசிவ் கன்டென்களை ரசிகர்களுக்கு காட்டுகிறேன் என பல பிட்டுகளை காட்டி 25 ஆயிரம் சப்ஸ்கிரைபர்களை அதிரடியாக சேத்தார்.

மாதம் ஒரு கோடி: மமிதா பைஜு போன்ற நடிகைகளே ஒரு படத்துக்கு ஒரு கோடி அளவுக்குத்தான் சம்பளம் வாங்கி வருகின்றனர். ஆனால், மாதம் சுமார் 1 கோடி ரூபாயை எப்படி ஒரு இன்ஸ்டா மாடல் சப்ஸ்க்ரிப்ஷன் ஆரம்பித்து சம்பாதித்தார் என்கிற கேள்வி இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தியது. 390*25,000 போட்டுப் பார்த்தால், 97 லட்சத்துக்கும் மேல் வருகிறது. ஆனால், அவர் வெளியிட்ட ஒரு வீடியோ ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரின் விமர்சனத்திற்கு உள்ளாகி, பின்னர் பெரிய இணைய சர்ச்சையாக அவரது சப்ஸ்கிரைபர்களை பாதியாக குறைத்து விட்டது.


மார்பில் டாட்டூ வீடியோ: அஸ்வினியை இப்போ வெறும் 13 ஆயிரம் பேர் தான் மாதம் தலா 390 ரூபாய் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்து பார்த்து வருகின்றனர். இந்நிலையில், மேலும், ரசிகர்களை அதிகரிக்க நேரடியாக இன்ஸ்டாகிராமிலேயே சமீபத்தில் மார்பின் அடிப்பகுதியில் டாட்டூ போடும் வீடியோ ஒன்றையும், ஜாக்கெட் அணியாமல் முதுகில் ஓவியம் வரையும் வீடியோவையும் வெளியிட்டு ஃபாலோயர்களையும் சப்ஸ்கிரைபர்களையும் அதிகரித்து வருகிறார். சுமார் ஒரு கோடி சம்பாதித்து வந்த அஸ்வின் தற்போது மாதம் 50 லட்சம் வரை சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News