750 கைக்கடிகாரங்கள் வைத்திருந்த மிஷ்கின்! 'பார்க்கிங்' இயக்குநர் ராம்குமாருக்கு வாட்ச் பரிசளித்த நெகிழ்ச்சி சம்பவம்!

750 கைக்கடிகாரங்கள் வைத்திருந்த மிஷ்கின்! 'பார்க்கிங்' இயக்குநர் ராம்குமாருக்கு வாட்ச் பரிசளித்த நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் மிஷ்கின். இவரது எளிமையான குணமும், வித்தியாசமான செயல்பாடுகளும் ரசிகர்களிடையே கவனம் பெறுவது வழக்கம். அந்த வகையில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு மிஷ்கின் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்த சம்பவம் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

'பார்க்கிங்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர் சமீபத்தில் இயக்குநர் மிஷ்கினைச் சந்தித்தபோது, இருவருக்கும் இடையே சுவாரஸ்யமான உரையாடல் நடைபெற்றுள்ளது.

அப்போது மிஷ்கினிடம், "சார், எனக்கு இன்னும் நீங்கள் வாட்ச் கொடுக்கவில்லையே" என்று ராம்குமார் நகைச்சுவையாகக் கேட்டுள்ளார். இதைக் கேட்ட மிஷ்கின் உடனடியாகத் தனது கையில் அணிந்திருந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

மேலும், ஒரு காலத்தில் தன்னிடம் சுமார் 750 கைக்கடிகாரங்கள் இருந்ததாகவும், அவற்றில் பலவற்றை மற்றவர்களுக்குப் பரிசாக வழங்கியதாகவும் மிஷ்கின் தெரிவித்துள்ளார். தற்போது தன்னிடம் இரண்டு கைக்கடிகாரங்கள் மட்டுமே இருப்பதாகவும், அவை இரண்டையும் தனது மகள் பரிசாக வழங்கியதால் அவற்றை மட்டும் பத்திரமாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் தனது விருப்பமான பொருட்களைப் பரிசளிக்கும் மிஷ்கினின் இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News