20 நாட்களில் ரூ.275 கோடி வசூல் வேட்டை நடத்திய சூர்யாவின் சீன் திரைப்படம்

20 நாட்களில் ரூ.275 கோடி வசூல் வேட்டை நடத்திய சூர்யாவின் சீன் திரைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'சீன்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் சீன் ஆகிய மூன்று திரைப்படங்களும் வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீன் திரைப்படம் வெளியாகி 20 நாட்களைக் கடந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை ரூ.275 கோடி வசூல் செய்துள்ளதாக சினி உலகம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பொறுப்புத் துறப்பு: இந்த வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை அல்ல. சினி உலகம் தரப்பில் கண்காணிக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.

LATEST News

Trending News