4 ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை.. வேறு யாராக இருந்தாலும் டென்ஷனாகியிருப்பார்கள் – செந்தில் வேதனை!

4 ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை.. வேறு யாராக இருந்தாலும் டென்ஷனாகியிருப்பார்கள் – செந்தில் வேதனை!

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் கூட்டணி ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் செந்தில், தற்போது அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் செந்தில் தனது வீட்டை வாடகைக்கு விட்டதால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

சென்னை சாலிகிராமத்தில் செந்தில் கட்டிய வீட்டை, சினிமா மேலாளர் ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார். ஆனால், அந்த நபர் வீட்டை மற்றொருவருக்கு வாடகைக்கு விட்டதுடன், வீடு தொடர்பாக போலி ஆவணங்களையும் தயாரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நான்கு ஆண்டுகளாக வாடகையும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் பொலிஸில் புகார் அளித்த நிலையில், குறித்த சினிமா மேலாளர் கைது செய்யப்பட்டதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டில் குடியிருந்தவர்கள் வீட்டை காலி செய்ய மறுத்ததால், செந்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

LATEST News

Trending News