“ஆண்கள் பாவம்... எத்தனை நாள்தான் பெண்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டிருப்போம்?” – பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி ஆதங்கம்!

“ஆண்கள் பாவம்... எத்தனை நாள்தான் பெண்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டிருப்போம்?” – பெண்கள் பாதுகாப்பு குறித்து நடிகை ரேவதி ஆதங்கம்!

பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து பெண்களுக்கு மட்டுமே அறிவுரைகள் வழங்கப்படுவது குறித்து நடிகை ரேவதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மண்வாசனை திரைப்படம் மூலம் அறிமுகமாகி, மௌன ராகம், புன்னகை மன்னன், அஞ்சலி, தேவர் மகன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரேவதி. தற்போது நடிப்புடன் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆண் குழந்தைகளின் வளர்ப்பு குறித்து முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இதன்போது பேசிய அவர், “ஆண்கள் பாவம்... எத்தனை நாள் பெண்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம்? பெண்களுக்கு மட்டுமே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருப்பதைவிட, ஆண்களுக்கும் சரியான புரிதலை ஏற்படுத்தி வளர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பெண் எப்போதும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவது மட்டுமே பெண்களின் பாதுகாப்பிற்கான தீர்வாகிவிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆண் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும், அவர்களிடம் எப்படிப் பழக வேண்டும், தவறான செயல்கள் மற்றவர்களுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வீட்டிலிருந்தே ஆண் குழந்தைகளுக்கு இத்தகைய நல்ல புரிதல்களை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைக் குறைக்க முடியும் என்றும் ரேவதி தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு என்பது பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அறிவுரைகளால் சாத்தியமாகாது; ஆண் குழந்தைகளின் வளர்ப்பிலும் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற அவரது கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது

LATEST News

Trending News