சிங்காரம் திரை விமர்சனம்
இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் யோகிபாபு மண்டேலா படத்திற்கு பிறகு ஒரு பொலிட்டிகல் ட்ராமாவை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார், அத்தகைய வெற்றியை இதுவும் கொடுத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
யோகிபாபு குறவர் சமூகத்தை சார்ந்தவர். இவர் ஊர் ஊராக சென்று தாங்க தயார் செய்த பொருட்களை விற்று வேலை பார்த்து உழைத்து சம்பாதிக்கிறார்.
ஆனால், இவர்களுக்கு அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய எந்த ஒரு நலத்திட்டங்களும் கிடைக்கவே இல்லை, கேட்டால் இவர்கள் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள் என காரணம் காட்டி சலுகைகள் மறுக்கின்றனர்.

இந்நிலையில் யோகிபாபு தந்தை எம் எஸ் பாஸ்கர் எப்போதும் லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் உள்ளவர், அவருக்கு லாட்டரியில் ஒரு பரிசு தொகை ஒரு கட்டத்தில் அடிக்கிறது.
அதன் பிறகு இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது, எங்கெங்கு இவர்கள் சென்றார்கள் என்ற பாலிட்டிக்ஸே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
யோகிபாபு மண்டேலாக்கு பிறகு கண்டிப்பாக இது அவர் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம், எத்தனை காமெடி கதாபாத்திரம் நடித்தாலும் இந்த மாதிரியான கேரக்டர் தான் அவருக்கு காலத்திற்கு நிற்கும்.
இவரை விட படத்தில் இன்னும் ஒரு படி எல்லோரையும் கவர்ந்தது தந்தை எம்.எஸ் பாஸ்கர் தான், மனுஷன் ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் அப்படியே அந்த கதாபாத்திரமாக மாறுவது தான் இவரின் பலமே, இதிலும் சிறப்பாக செய்துள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் களம் தான், இப்படி ஒரு களத்தை தேர்ந்தெடுத்து இந்த மக்களுகாக பேசிய விதத்திற்காகவே கண்டிப்பாக இயக்குனர் கதிர்வேலுக்கு பூங்கொத்து.
சமூகத்தில் நடக்கும் ஏற்ற தாழ்வு, அடிப்படை உரிமை கூட கிடைக்காமல் ஒரு சமூகத்தினர் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று காட்டிய விதம் தம்ஸ் அப் தான், அதிலும் அந்த இடைவேளை காட்சி கண்டிப்பாக பேசப்படும்.
இப்படி படத்தில் பல ப்ளஸ் இருந்தாலும் மண்டேலாவில் இருந்த பொழுதுபோக்கு அம்சம் இதில் குறைவு தான், அதிலும் காமெடி கவுண்டர் எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை, அதுவே மைனஸ் ஆக அமைகிறது. டெக்னிக்கல் ஆக பட்ஜெட் பிரச்சனை நன்றாகவே தெரிகிறது.
க்ளாப்ஸ்
- கதைக்களம்
- நடிகர், நடிகை பங்களிப்பு
- வசனங்கள்
பல்ப்ஸ்
- பெரிய சுவாரஸ்யமில்லாத முக்கியமாக காமெடி ஒர்க் அவுட் ஆகாதது காட்சிகளில் பொழுதுபோக்கு தன்மை குறைகிறது.
மொத்தத்தில் இந்த சிங்காரம் கண்டிப்பாக கொண்டாட வேண்டியவர், ஆனால் மண்டேலா அளவிற்கு இல்லை.
