மீண்டும் நடிக்கப்போகும் நடிகர் விஜய், இயக்குனர் யார் தெரியுமா?... பட்ஜெட் அதிகமா...
நடிகர் விஜய்
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியம் செய்து வந்த பிரபலம்.
இதுவரை 69வது படங்கள் நடித்துள்ளார், மேலும் அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்று தான் ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள்.
ஆனால் விஜய் தன்னை வளர்த்த தமிழ் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று அரசியலில் களமிறங்கினார், அதில் வெற்றியும் கண்டு இப்போது தமிழக முதலமைச்சராக கெத்து காட்டி வருகிறார்.
ஒவ்வொரு நாளும் மக்கள் நம்பிக்கையை பெற்றுவரும் விஜய் மக்களுக்காக நிறைய நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
நடிப்பு
அரசியலில் களமிறங்க முடிவெடுத்த விஜய் நடிப்பில் இருந்து மொத்தமாக விலகுவதாக அறிவித்தார், அந்த விஷயம் அவரது ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது என்றே கூறலாம்.
தற்போது விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அது என்னவென்றால், தமிழக அரசு சார்ந்த ஒரு விளம்பரத்தில் விஜய் நடிக்க உள்ளாராம். அதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க இருக்கதாகவும், பட்ஜெட் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
விளம்பர பட படப்பிடிப்பிற்காக விஜய் 2 நாள் தேதி கொடுத்திருக்கிறாராம், ஆனால் இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. By-Election முடிந்த பிறகு இந்த விளம்பர பட படப்பிடிப்பு துவங்கும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.