தலைப்பு: ஒரு மணி நேரத்தில் 70 ஆயிரம் டிக்கெட்டுகள்! முன்பதிவில் மின்னல் வேகத்தில் முன்னேறும் ராமாயணா!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணா இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற பிரீமியர் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள், படத்தின் பிரம்மாண்டமான காட்சிகளையும் உருவாக்கத்தையும் பாராட்டி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சூடுபிடித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவில் ஒரே ஒரு மணி நேரத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ஒரு மணி நேரத்திற்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
சுமார் 2,000 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம் வசூலிலும் புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது!