அளவான மேக்கப்... அள்ளும் அழகு! ரசிகர்களைக் கவரும் பிரணிதா சுபாஷ்!

அளவான மேக்கப்... அள்ளும் அழகு! ரசிகர்களைக் கவரும் பிரணிதா சுபாஷ்!

தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த நடிகை பிரணிதா சுபாஷ், தற்போது தனது அழகிய புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரணிதா சுபாஷ்.

திருமணத்திற்குப் பின்னர் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் இவர், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து தனது புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னரும் தனது ஸ்டைலான தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது எளிமையான உடை, அளவான ஒப்பனை என இயல்பான அழகில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஆடம்பரமில்லாத உடையிலும் அழகாகத் தோற்றமளிக்கும் பிரணிதாவின் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.

 

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News