சிவப்பு நிற உடையில் அசத்தும் அதுல்யா ரவி! தீபாவளிக்கு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் போட்டோஷூட்!
சினிமா: தமிழ் நடிகை அதுல்யா ரவி தனது புதிய சிவப்பு நிற உடை புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது ஸ்டைலான புதிய தோற்றம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த அதுல்யா ரவி, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். 'காதல் கண் கட்டுதே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
'ஏமாளி', 'நாகேஷ் திரையரங்கம்', 'சுட்டுப்பிடிக்க உத்தரவு', 'அடுத்த சாட்டை', 'கேப்மாரி', 'நாடோடிகள் 2', 'முருங்கைக்காய் சிப்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவைத் தொடர்ந்து தெலுங்கிலும் தனது பயணத்தைத் தொடங்கிய அதுல்யா, 'மீட்டர்' திரைப்படத்தின் மூலம் அங்கும் அறிமுகமானார்.
சமீபத்தில் ஆர்யா, சரத்குமார் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்த 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திரைப்படங்களில் நடிப்பதுடன் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் அதுல்யா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்தப் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.