அய்யனார் துணை சீரியல்: நிலாவிற்காக சோழன் வாங்கிய தங்க வளையல்.. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்..

அய்யனார் துணை சீரியல்: நிலாவிற்காக சோழன் வாங்கிய தங்க வளையல்.. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Ayyanar thunai serial: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் வரும் வாரம் என்னென்ன நடக்கப்போகிறது என்பது குறித்த Promo வீடியோ வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

 

நிலாவிற்கு தங்க வளையல்

தன் மனைவி நிலாவிற்கு தங்க வளையல் வாங்கி தர வேண்டும் என நீண்ட நாட்களாக சோழன் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அதற்கான பணம் அவரிடம் இல்லை. இந்த சூழலில், ஒரு காரை விற்பனை செய்து கொடுத்தால் ரூ. 1.20 லட்சம் கமிஷன் கிடைக்கும் என முதலாளி கூற, அதை செய்து, அந்த பணத்தை சம்பாதித்தார் சோழன்.

அய்யனார் துணை சீரியல்: நிலாவிற்காக சோழன் வாங்கிய தங்க வளையல்.. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. | Chozhan Lost Gold In Ayyanar Thunai Serial

ரூ. 1.20 லட்சத்தை வைத்து நிலாவிற்கு தங்க வளையல் வாங்கி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருந்தார். அதன்படி, வீட்டிற்கு சென்று அந்த தங்க வளையலை நிலாவிடம் கொடுக்கும்போதுதான் தெரிகிறது, அந்த பையில் வளையல் இல்லை என்று.

இதனால் அதிர்ச்சி அடைகிறார் சோழன். உடனே அனைத்து இடங்களிலும் தேடி வருகிறார். வளையல் வாங்கிய ரசீதை கூட நிலாவிடமும், பாண்டியன் மற்றும் பல்லவனிடமும் காட்டுகிறார். பின், வளையல் மிஸ் ஆகி காரில் வந்தவரின் பையில் இருக்குமோ என சந்தேகப்பட்டு அவரின் வீட்டிற்கு சோழன் செல்கிறார்.

அய்யனார் துணை சீரியல்: நிலாவிற்காக சோழன் வாங்கிய தங்க வளையல்.. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.. | Chozhan Lost Gold In Ayyanar Thunai Serial

ஆனால், அவரோ தன்னுடைய பையில் அப்படி எந்த தங்க வளையலும் இல்லை என கூற, மொத்தமாக உடைந்துபோகிறார். நிலாவிற்காக வாங்கிய தங்க நகையை சோழன் எப்படி மீட்டெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

LATEST News

Trending News