கண்ணம்மாவுக்கு துரோகம் பண்றியானு.. ரோட்டில் வெச்சி அடிச்சாங்க.. பரீனா ஆசாத்
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிப் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற மெகா தொடர் 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியலில் முதன்மை வில்லி கதாபாத்திரமான 'வெண்பா' என்ற ரோலில் நடித்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானவர் நடிகை ஃபரினா ஆசாத். சீரியலில் கதாநாயகன் பாரதியை கைப்பற்றத் துடிக்கும் கொடூரமான வில்லியாக இவர் காட்டிய வில்லத்தனம் மற்றும் மிரட்டலான நடிப்பு, ஒட்டுமொத்த பார்வையாளிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
பரீனா ஆசாத்: ஆனால், சின்னத்திரையில் 'வெண்பா' கதாபாத்திரத்தில் மிரட்டியதால், நிஜ வாழ்க்கையில் தனக்கு நடந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து ஃபரினா ஆசாத் அளித்துள்ள பேட்டி சோஷியல் மீடியாவில் தீயாகப் பரவி வருகிறது. சின்னத்திரையில் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாவதும், பொது இடங்களில் கெட்ட வார்த்தைகளால் திட்டு வாங்கி இருக்கிறேன். ஒரு இடத்திற்கு நான் சென்ற போது என் முடியை பிடித்து அடித்தார்கள். வெளியே போகும்போது கூட 'வெண்பா' என்று சொல்லிக்கொண்டு அந்த மாதிரி ரொம்ப மோசமாக வார்த்தையால் திட்டி அடிப்பார்கள். குறிப்பா கிராமங்கள் மற்றும் ஊர் பக்கமெல்லாம் போனால், 'ஏண்டி கண்ணம்மாவுக்கு துரோகம் பண்ற? என்று கோபப்பட்டு என்னை நிஜமாகவே அடித்து இருக்கிறார்கள்.
அடிச்சாங்க: அதுமட்டுமில்ல இன்ஸ்டாகிராம் ஒரு பெண்ணுக்கு சீரியலில் நடந்தது போது அவரது கணவர் ஏமாற்றி இருக்கிறார். அந்த பெண், அந்த பொண்ண திட்டமுடியாததை எல்லாம் இண்ஸ்டகிராமில் வந்து என்னை திட்டுவார்கள். கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டி இருக்கிறார்கள் என்றார். தொகுப்பாளினியாகத் தனது பயணத்தைத் தொடங்கி, பின் சின்னத்திரை நடிகையாக மாறிய ஃபரினா ஆசாத், 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் அடைந்த வளர்ச்சி மாபெரும் உச்சம் அடைந்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து கொண்டிருந்தபோதே கர்ப்பமான ஃபரினா, தனது பிரசவ காலம் வரை தொடர்ந்து வெண்பாவாகவே நடித்து சின்னத்திரை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். சீரியல் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், இன்றும் கிராமப்புற மக்களிடையே 'வெண்பா' என்றால் நிஜமான வில்லி என்ற எண்ணமே நிலைத்து நிற்கும் அளவிற்கு தனது நடிப்பால் மிரட்டியிருந்தார்.