ஜெயிலர் 2 பிந்தாஸ்.. தேவயானி மகள் வெர்ஷனை பாருங்க.. சும்மா கலக்குறாங்க
சென்னை: கோலிவுட்டில் ஃபேமஸான நடிகைகளில் ஒருவர் தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகளான இனியா சிறப்பாக பாடல்கள் பாடக்கூடியவர். இளைய மகளான பிரியங்கா இப்போது ரஞ்சன் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இரண்டு பேருமே தாய் மாதிரி சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான தேவயானிக்கு அஜித்துக்கு ஜோடியாக நடித்த காதல் கோட்டை திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் அவர் ஏற்றிருந்த கமலி கதாபாத்திரம் அந்த சமயத்தில் பல இளைஞர்களுக்கு ஃபேவரைட். அப்படத்துக்கு பிறகு அவர் நடித்த பாட்டாளி, சூர்யவம்சம் நினைத்தேன் வந்தாய், ப்ரெண்ட்ஸ் என பல படங்கள் வெற்றி பெற்று அவருக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கியது.

கிளாமர் காண்பிக்காத ஹீரோயின்: தமிழ் சினிமாவில் கிளாமர் காண்பிக்காமல் வெற்றி பெற்ற ஹீரோயின்களில் தேவயானியும் ஒருவர். நதியா, சித்தாரா, ஷாலினி வரிசையில் அவர் அந்தப் பெயரை எடுத்தார்.அதற்காகவே அவரை ஒருதரப்பினர் ரசித்தார்கள். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் நடித்தபோதும் கிளாமருக்கு நோ என்ற கொள்கையில் உறுதியாகவே இருந்தார். அப்படி இருந்ததோடு மட்டுமின்றி அந்த மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜகுமாரனுடன் திருமணம்: தேவயானி பீக்கில் இருந்தபோது ராஜகுமாரன் இயக்கத்தில் நீ வருவாய் என படத்திலும் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திலும் நடித்தார். அந்த சமயத்தில் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் தேவயானி வீட்டில் இந்தக் காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்டார். பீக்கில் இருந்த தேவயானி இரண்டே படங்கள் இயக்கிய ராஜகுமாரனை திருமணம் செய்திருந்தது பெரிய ஆச்சரியத்தை உண்டு செய்து.
இனியாவின் பாடும் திறமை: தேவயானி - ராஜகுமாரன் தம்பதிக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்த மகள் இனியா தனியார் சேனலில் பங்கேற்ற பாடல் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடினார். அவரால் அந்தப் போட்டியில் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் பலரது மனங்களை வென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் மறைந்த தேனிசை தென்றல் தேவா உள்ளிட்டோர் எல்லாம் இனியாவின் குரல் வளத்தை வெகுவாக பாராட்டினார்கள். விரைவில் திரைத்துறையிலும் பிஸியான பாடகியாக வருவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அவருக்காக சாய் அபயங்கரிடம் தேவயானி சான்ஸும் கேட்டார்.மூத்த மகள் நடிகை: மூத்த மகள் பாடகி என்றால் இளைய மகள் பிரியங்கா நடிகையாக மாறியிருக்கிறார். அவர் ரஞ்சன் தி அட்வகேட்,பிளாக் நைட் பாய்ஸ் ஆகிய படங்களில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். சமீபத்தில்தான் அதற்கான பூஜை நடைபெற்று ஷூட்டிங்கும் தொடங்கியது. இந்நிலையில் இனியாவின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
இனியா வீடியோ: அதாவது ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற்ற பிந்தாஸ் என்ற பாடலுக்குத்தான் நடனம் ஆடியிருக்கிறார் இனியா. அந்தப் பாடலுக்கு அட்டகாசமான நடனத்தை வெளிப்படுத்தியதை பார்த்த ரசிகர்கள், இனியாவுக்கு பாடும் திறமை மட்டுமில்லை; சூப்பராக் நடனம் ஆடும் திறமையும் இருக்கிறது; அக்கா, அம்மா மாதிரியே விரைவில் நடிகையாகிவிடுவார் என்று கணிப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் இந்த வெர்ஷனும் நன்றாக இருக்கிறது என சொல்லி அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள்.