விஜய்க்கு கூடிய கூட்டம் மாதிரியே.. திரிஷா ரோடு ஷோ சொல்ல வருவது என்ன?.. விதை போட்டாச்சா?

விஜய்க்கு கூடிய கூட்டம் மாதிரியே.. திரிஷா ரோடு ஷோ சொல்ல வருவது என்ன?.. விதை போட்டாச்சா?

சென்னை: நடிகை திரிஷா இப்போதும் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார்.மேலும் முதலமைச்சர் விஜய்க்கும் நெருங்கிய நட்பில் இருப்பதால்; அடிக்கடி ஹெட்லைன்ஸிலும் வருகிறார். சூழல் இப்படி இருக்க கோவையில் நடந்த தனியார் மொபைல் ஷோ ரூம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள சென்ற அவர்; ரோடு ஷோ செய்தது சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

திரிஷா திரைத்துறைக்கு வந்து 20 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. பல ஹிட் படங்களிலும், சில தோல்வி படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக 96 வரை அவருக்கு சில படங்கள் தோல்வியைத்தான் கொடுத்தன. அதிலிருந்து மீண்ட அவர் தற்போது மீண்டும் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி என வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களிலும் அவர் கமிட்டாகி நடித்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போதும் குறையாத அவரது மவுசு இளம் ஹீரோயின்களின் வயிற்றில் புளியை கரைத்தது என்றே சொல்லலாம்.

Trisha Road Show in Coimbatore Sparks Speculation About Her Political Entry Into TVK

தலைப்பு செய்தியாக திரிஷா: இதற்கிடையே சர்ச்சைகளில் சிக்குவதையும் கொஞ்சம் குறைத்திருந்த திரிஷா; தேர்தலுக்கு முன்பிருந்து அதிலும் சிக்குகிறார். அதிலும், விஜய் - சங்கீதா விவகாரத்தில் திரிஷாவின் பெயர்தான் பலமாக அடிபட்டது. அந்தப் பேச்சுக்களுக்கு எல்லாம் பலம் சேர்க்கும் விதமாக இரண்டு பேரும் ஜோடியாக நல்லது, கெட்டதுகளில் கலந்துகொள்கிறார்கள். அஜித் அம்மாவின் மறைவு, ஏஜிஎஸ் வீட்டு திருமணம் என ஜோடியாக சென்றார்கள்.

அதுமட்டுமின்றி முதலமைச்சரானதும் விஜய் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கொடியேற்றியபோது; தனது தாயுடன் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அரசு தொடர்பான நிகழ்ச்சியில் திரிஷாவை அப்படி அமர வைத்தது பெரும் சர்சையையும், விமர்சனத்தையும் சந்தித்தது. ஆனால் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத விஜய் - திரிஷா; அஜித் பங்கேற்ற கார் ரேஸை பார்க்கவும் ஒன்றாக சென்றார்கள். இப்படி தொடர்ந்து விஜய்யுடன் பயணிப்பதால் அவர் அரசியலுக்கு வருகிறார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.

திரிஷாவின் ரோடு ஷோ: சூழல் இப்படி இருக்க கடந்த சில மாதங்களாக ஹெட்லைன்ஸில் வராத திரிஷா; நேற்று கோவையில் தனியார் மொபைல் ஷோ ரூம் ஒன்றை தொடங்கி வைக்க சென்றார். அப்போது திறந்த வாகனத்தில் இருந்தபடி ரோடு ஷோவும் செய்தார். அவரை பார்ப்பதற்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூடினார்கள். இதுவரை அவர் இப்படி ரோடு ஷோ செய்தது கிடையாது. எனவே இப்போதைய அவரது செயல் பல விதமான பேச்சுக்களை கிளப்பிவிட்டிருக்கிறது.

LATEST News

Trending News