வானமே மந்தமா இருக்கு.. இப்படி போட்டோ போட்டு மந்தமாக்காதீங்க.. பூர்ணிமா ரவியின் கிளாமர் போஸ்!
சென்னை: யூடியூப் மூலம் பிரபலமாகி, விஜய் தொலைக்காட்சியின் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 7' நிகழ்ச்சியில் போட்டியாளராகக களமிறங்கித் தனது துணிச்சலான ஆட்டத்தால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் கவனத்தை பெற்றவர் நடிகை பூர்ணிமா ரவி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் பூர்ணிமா, இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
நடிகை பூர்ணிமா ரவி: வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை பூர்ணிமா ரவி, அண்மையில் ஜெயராம், ஊர்வசி, சாண்டி மாஸ்டர் நடித்த 'பரிமளா அண்ட் கோ' திரைப்படத்தில் சாண்டியின் காதலியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வசூலை வெற்றது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் இவர், இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து போட்டோஸ் மற்றும் ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.

கிளாமர் அவதாரம்: தற்போது அவர் வெளியாகியுள்ள புகைப்படங்களில், பூர்ணிமா ரவி கருப்பு நிற 'சீக்வின்' டிசைன் செய்த ஸ்ட்ராப்லெஸ் உடையில் செம ஸ்டைலிஷாகவும் படுகவர்ச்சியாகவும் போஸ் கொடுத்துள்ளார். மேலும், தனது கூந்தலை பின்னலாக பின்னி, மேக்கப் மற்றும் ஹூப் கம்மல்களுடன் கண்ணை கவரும் வகையில் போஸ் கொடுத்து நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பூர்ணிமாவின் இந்த தூக்கலான கவர்ச்சி அவதாரத்தை பார்த்த ரசிகர்கள், மழையால் வானமே மந்தமா இருக்கு, இப்படி போட்டோ போட்டு இன்னும் எங்களை மந்தமாக்காதீங்க என அவரசின் ரசிகர்கள் புகைப்படங்களுக்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுக்க தொடர்ந்து மாஸ் காட்டி வரும் பூர்ணிமா ரவியின் இந்த ஹாட் போட்டோஷூட் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் டாபிக்காக மாறியுள்ளது. பூர்ணிமா ரவி இந்த போட்டோவை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே மலைபோல் லைக்குகள் குவிந்து வருகின்றன. கூடிய விரைவில் பூர்ணிமாவிற்கு தனது திறமையை நிரூபிக்கும் வகையில் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என சில ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.