பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்

Chef damu passes away: பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருடைய மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

செஃப் தாமு

சமையல் கலையில் பல சாதனைகளை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் செஃப் தாமு (கே. தாமோதரன்). மண்மணம் மாறாமல் இவர் செய்யும் சமையலுக்கு ரசிகர்கள் ஏராளம். வாழ்நாள் சாதனையாளர், பத்மஶ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை இவர் வென்றுள்ளார். மேலும், கின்னஸ் உலக சாதனையிலும் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. 

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார் | Chef Damu Passed Away

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக வந்த தாமு அவர்களின் ஜாலியான பக்கத்தையும் ரசிகர்களால் காண முடிந்தது. செஃப் தாமு என்பதை தாண்டி ரசிகர்கள் பலரும் இவரை தாமு அப்பா என்று சமூக வலைத்தளங்களில் அழைத்தனர்.

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார் | Chef Damu Passed Away

 

காலமானார்

இந்த நிலையில், உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செஃப் தாமு இன்று காலமானார். இவருடைய வயது 72. இவரது மறைவு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News