குழந்தையால் ஒன்றிணைவார்களா சரவணன் - தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்

குழந்தையால் ஒன்றிணைவார்களா சரவணன் - தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்

Pandian stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் விஷயங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

 

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்போது தங்கமயிலுடன் தன்னை சேர்த்து வைக்க அப்பாவும், அம்மாவும் நினைக்கிறார்கள் என கோபத்தில் குழந்தையை தூக்கிக்கொண்டு அஞ்சலி வீட்டிற்கு சென்றார் சரவணன்.

அதன்பின், பாண்டியனும் கோமதியும் அஞ்சலி வீட்டிற்கு சென்று, சரவணனை அழைத்து வந்தனர். என்ன நடந்தாலும், அஞ்சலியைத்தான் திருமணம் செய்துகொள்வேன், மீண்டும் தங்கமயிலுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என ஒற்றைக்காலில் நிற்கிறார் சரவணன்.

குழந்தையால் ஒன்றிணைவார்களா சரவணன் - தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் | Pandian Stores Serial Upcoming Episode Promo

 

ப்ரோமோ

இந்த நிலையில், வரும் வாரம் நடக்கவிருக்கும் விஷயங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் குழந்தையை மருத்துவரிடம் கொண்டு செல்கிறார்கள்.

குழந்தையால் ஒன்றிணைவார்களா சரவணன் - தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் | Pandian Stores Serial Upcoming Episode Promo

அந்த குழந்தையை வைத்துதான் இருவரும் ஒன்று சேர வேண்டும் என கோமதியும் பாண்டியனிடம் கூறுகிறார். இதன்பின், தங்கமயிலிடம் பேசும் சரவணன், 'சின்ன குழந்தை என்றால் இப்படியெல்லாம் ஏற்படும், இதை நினைத்தெல்லாம் பயப்பட வேண்டாம். நான் இருக்கிறேன்' என கூறுகிறார்.

இதோ அந்த ப்ரோமோ:

 

LATEST News

Trending News