விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்: மருத்துவமனையில் அனுமதி!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்: மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணின் நெருங்கிய உறவினர். இவர் நேற்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்த போது வெளிநாட்டு ஆடம்பர கார் ஒன்று திடீரென உரசி சென்றது. இதன் காரணமாக தடுமாறி கீழே விழுந்த சாய் தரம் தேஜ், கை, இடுப்பு முகம் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் தலையில் காயம் இல்லை என்றும் தெரிய வருகிறது

இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாய் தரம் தேஜ் விபத்துக்குள்ளானது குறித்த தகவல் அறிந்ததும் சிரஞ்சீவி அவரது மனைவியாரும் மனைவி சுரேகா, பவன்கல்யாண் மற்றும் வருண் தேஜ் உள்பட அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்

சாய் தரம் தேஜ் தற்போது உடல் நலம் தேறி வருகிறார் என்றும் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை என்றும், எனவே யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES