பிக் பாஸில் ராணி பதவி மூலம் முழு வன்மத்தையும் கக்கிய சாச்சனா! கடுப்பாகிய போட்டியாளர்கள்
தற்போது பெண்கள் அணியில் ராணியாக பதவி ஏற்றிருக்கும் சாச்சனா எல்லை மீறி நடந்துகொள்வதற்கு போட்டியாளர்கள் பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசன் இதற்கு முன்னாடி உள்ள சீசன்களை போல இல்லாமல் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது. பிக் பாஸால் பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன.
இதில் இந்த வாரம் ராஜா ராணி ஆட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் அணியில் ராணவ் ராஜாவாகவும் பெண்கள் அணியில் சாச்சனா ராணியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சாச்சனா வன்மத்தை மற்றவர்கள் மேல் திணிக்கிறாரே தவிர அவர் இந்த நிகழ்ச்சிக்கு விளையாட வந்ததை போல இல்லை. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் சாச்சனா உணவு விஷயத்தில் செய்வதே மக்கள் மத்தில் விமர்சனத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
இதில் இவர் ராணி பதவி கொடுத்ததில் இருந்து அதை வைத்து விளையாடுவதாக இல்லை.வன்மத்தை மட்டுமே கக்குறார். ஜெப்ரிக்கு 100 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என அவர் கொடுத்த தண்டனை முழு வன்மமாக தெரிந்தது.
இதை அவரே ஒப்புக்கொண்டது போட்டியாளர்கள் உட்பட பார்வையாளர்களையும் கடுப்பேற்றியுள்ளது. இதற்கு பார்வையாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விஜய் சேதுபதி இந்த வாரம் இவர் செய்த தவறுகளை தட்டி கேட்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.