நீளம் கருதி ரெண்டாகப் பகிர்கிறேன்..மற்றெதையும் ரெண்டாக்க அல்ல! திரிஷா பற்றி மீண்டும் பேசிய பார்த்திபன்...

நீளம் கருதி ரெண்டாகப் பகிர்கிறேன்..மற்றெதையும் ரெண்டாக்க அல்ல! திரிஷா பற்றி மீண்டும் பேசிய பார்த்திபன்...

விஜய் - திரிஷா இருவரும் திருமணத்திற்கு ஜோடியாக வந்த விஷயம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், பல பிரபலங்கள் இதுகுறித்து விமர்சித்து பேசி வருகிறார்கள். சமீபத்தில் இயக்குநர் பார்த்திபன், மகளிர்தின நிகழ்ச்சியின் போது திரிஷா புகைப்படத்தை காட்டியபோது இந்த குந்தவை வீட்டிலேயே குந்தவைத்தால் நல்லது என்று கூறியிருந்தார்.

நீளம் கருதி ரெண்டாகப் பகிர்கிறேன்..மற்றெதையும் ரெண்டாக்க அல்ல! திரிஷா பற்றி மீண்டும் பேசிய பார்த்திபன்... | Parthuban Apologize For All Trisha Vijay Issues

அவர் பேசிய வீடியோ இணையத்தில் பகிரபட்ட நிலையில், மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட நினைத்த போது, திரிஷா, இதை கண்டித்து ஒரு பதிவினை பகிர்ந்தார்.

இதனை பார்த்த பார்த்திபன், நான் மன்னிப்பு கேட்டிருக்கக்கூடாது என்று தோன்றியதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.

இந்நிலையில் மீண்டும் திரிஷா - விஜய் குறித்து ஒரு வீடியோவை பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.

நீளம் கருதி ரெண்டாகப் பகிர்கிறேன்..மற்றெதையும் ரெண்டாக்க அல்ல! திரிஷா பற்றி மீண்டும் பேசிய பார்த்திபன்... | Parthuban Apologize For All Trisha Vijay Issuesஅதில், விஜய் நினைத்திருந்தால், வேண்டாம் நீ வீட்டிலேயே இரு என்று சொல்லியிருந்தால் இந்த பிரச்சனை வராதோ என்ற ஒருவொரு விஷயம் தான், நான் வெளிப்படுத்திய விஷயம் என்று பேசியிருக்கிறார். மேலும், விஜய் அரசியல் குறித்து தன்னுடய ஆதரவை பற்றியும் பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.

மேலும், எதுக்குமே பதில் சொல்லாதவர்கள், நான் சொன்னதுக்கு மட்டும் பதில் சொன்னதுக்கு நான் பெரிய பதில் சொல்ல வேண்டியதாச்சு. திரிஷா உடல்தானம் செய்த செய்தி, நல்லக்கண்ணு ஐயா மறைவின்போது தான் தெரியவந்தது.

அப்போது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, திரிஷா பாராட்டணும்னு நினச்சேன், இந்த நேரத்தில் இவ்வளவு கசப்பான விஷயம் நடந்தப்பின்பும், திரிஷாவின் இந்த செயலுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நான் பேசியதில் தவறாக இருந்தால், நண்பர்கள் அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றும் இதைப்பற்றி இனி நான் பேசப்போவதில்லை. இதோடு முடித்துக் கொள்வதே நமக்கு நல்லது .நன்றி! என்றும் கூறியுள்ளார் பார்த்திபன்.

LATEST News

Trending News