பிரியங்கா சகோதரர் நடத்திய பேச்சுவார்த்தை: உடனடியாக நிரூப் செய்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று பிரியங்காவின் தாயார் மற்றும் சகோதரர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பிரியங்கா மற்றும் நிரூப் இடையே வாக்குவாதம் முற்றியது என்பதும் இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நிரூப்-பிரியங்கா பிரச்சனையை முடித்து வைக்க பிரியங்காவின் சகோதரர் விரும்பியதை நிரூப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீண்டும் பிரியங்காவை தோழியாக நிரூப் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நிரூப் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் கை குலுக்கிக் கொண்டு மீண்டும் நண்பர்களாகியுள்ளனர்.
நிரூப் மற்றும் பிரியங்கா இடையே இருந்த கருத்து வேறுபாட்டை பிரியங்கா குடும்பத்தினர் வந்ததால் நீங்கிவிட்டதை அடுத்து அடுத்தவரும் சில வாரங்களில் இருவரும் எந்த வகையில் விளையாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day81 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/KphF1AwhSn
— Vijay Television (@vijaytelevision) December 23, 2021