கேரளா சென்ற 'தி லெஜண்ட்' படக்குழுவினர்: மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு!

கேரளா சென்ற 'தி லெஜண்ட்' படக்குழுவினர்: மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு!

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அதற்கேற்ப புரமோஷன் பணிகளும் நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லெஜண்ட்சரவணன், ஊர்வசி ரெளட்டாலா உள்பட படக்குழுவினர் இன்று கேரளாவுக்கு புரமோஷனுக்காக சென்றுள்ளனர். முன்னும் பின்னும் பைக்குகள் புடைசூழ வந்த படக்குழுவினர்களுக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும், இன்னும் சில நிமிடங்களில் கேரளாவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

LATEST News

HOT GALLERIES