நடிகைகள் இதை செய்வதால் அந்த நேரத்தில் கிளர்ச்சி கிடைப்பதில்லை சீரியல் நடிகை தேவிப்பிரியா ஓப்பன் டாக்!

நடிகைகள் இதை செய்வதால் அந்த நேரத்தில் கிளர்ச்சி கிடைப்பதில்லை சீரியல் நடிகை தேவிப்பிரியா ஓப்பன் டாக்!

பிரபல சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா சமீபத்தில் அளித்த பேட்டியில், கடந்த காலத்தில் சீரியல் நடிகைகள் மற்றும் ரசிகர்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் இன்றைய சமூக வலைதளக் காலத்தில் உள்ள வேறுபாடுகளை விளக்கியுள்ளார்.

அவர் கூறுகையில், முன்பு நடிகைகளை தொலைக்காட்சியில் மட்டுமே பார்க்க முடியும்; அவர்கள் பெரும்பாலும் ஸ்டூடியோ அல்லது வீட்டில் இருப்பதால், திடீரென அவர்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும் ஈர்ப்பும் ஏற்பட்டது.

அவர்களுடன் புகைப்படம் எடுக்கவும், பேசவும் ஆசைப்பட்டனர்.ஆனால், தற்போது சமூக வலைதளங்கள் அதிகரித்ததால், நடிகைகள் தங்கள் தினசரி வாழ்க்கை, காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை அனைத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதனால், ரசிகர்களுக்கு நடிகைகளை பற்றி நெருக்கமான தகவல்கள் தெரிந்து, அவர்களுடன் உறவு உள்ளது போல் உணர்கின்றனர். இதுவே நேரில் பார்க்கும்போது முன்பு இருந்த மகிழ்ச்சி மற்றும் கிளர்ச்சியை குறைத்துள்ளதாக தேவிப்பிரியா தெரிவித்தார்.

அவர் ஒரு உதாரணத்தையும் முன் வைத்தார், தொடர்ந்து பார்க்கும் பொருளில் ஈர்ப்பு குறையும், ஆனால் திடீரென பார்க்கும் பொருள் மீது மகிழ்ச்சி கிடைக்கும். ஒரு பொருளை அப்படியே கொண்டு சென்று பரிசு கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விட, அதை ஒரு கிஃப்ட் ரேப்பர் சுற்றி கொடுத்தால் ஒரு எதிர்பார்ப்பு கிடைக்கும் அதை பிரிக்கும் போது ஒரு கிளர்ச்சி இருக்கும் என விளக்கினார்.

அதேபோல, நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பகிர்வதால், ரசிகர்களின் ஈர்ப்பு குறைந்து, அவர்களை பொருட்படுத்தாமல் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இது ரசிகர்-நடிகை தொடர்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தேவிப்பிரியா அவதானிக்கிறார்.

LATEST News

Trending News