யார் பிரபலம்!! மனைவி கிருத்திகாவிற்கு அட்வைஸ் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்..
இயக்குநரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு செலிபிரிட்டி என்றால் யார்? அது நீங்கள் யார் என்பதற்கும், மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கும் இடையிலான ஒன்று.
ஒரு கட்டத்தில் நீங்கள் உண்மையில் யார் என்பதை மறந்து, மக்கள் உங்களைப்பற்றி கொண்டுள்ள எண்ணமே நீங்கள் என்று நினைக்கத் தொடங்கினால், நீங்கள் பெரிய பிரச்சனையில் சிக்கிவிட்டீர்கள் என்று தான் அர்த்தம் என்று எக்ஸ்தள பக்கத்தில் சில நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தார்.
பலரும் இதற்கு நடிகர் விஜய்யை பற்றிதான் மறைமுகமாக கிருத்திகா விமர்சிக்கிறார் என்று கூறி வந்தனர்.
இந்நிலையில், கிருத்திகாவின் கணவரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு பதிவினை போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
அந்த பதிவில், கிருத்திகா பைக் ஓட்டிக்கொண்டு வருவது போலவும், பின்னணியில் கவுண்டமணி காமெடி ஒன்றை போட்டுள்ளார். அதோடு, நீங்கள் பெரிய பிரபலமாக இருக்கலாம், ஆனால் பாத்து வண்டிய ஓட்டணும் என்று கூறி மனைவி கிருத்திகாவை கலாய்த்துள்ளார்.
What is a celebrity?
— kiruthiga udhayanidh (@astrokiru) March 7, 2026
There is You and people's perception of You that makes you a celebrity. Once you start thinking you are people's perception and abandon the You... You are in serious trouble.