நீச்சல்குள கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட 43 வயது அஜித் பட நாயகி..!

நீச்சல்குள கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட 43 வயது அஜித் பட நாயகி..!

அஜித் படத்தில் நாயகியாக அறிமுகமான 43 வயது நடிகை தனது சமூக வலைதளத்தில் நீச்சல்குள கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ’உன்னை தேடி’ என்ற திரைப்படம் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியானது என்பதும், இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் அஜித் நடித்த ’ஆனந்த பூங்காற்றே’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ’கோல்மால்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் 43 வயதாகும் மாளவிகா அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் நீச்சல்குளத்தில் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

பெங்களூரை சேர்ந்த நடிகை மாளவிகா கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2008ஆம் ஆண்டு மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES