“என்னோட தொப்புளில் இன்னும் என்னனென்ன கொடுமை பண்ண போறாங்களோ..” இலியானா ஆர்வகோளாறு..!
பாலிவுட் படங்களில் அறிமுகமான புதிதில் நடிகை இலியானாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.
அந்த நேரத்தில் தலைகால் புரியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிகை இலியானா பேசிய பேச்சு சிக்கல் தென்னிந்திய சினிமா வட்டார பிரபலங்களை கோபத்தில் ஆழ்த்தியது என கூறலாம்.
இவர் நடித்த முதல் பாலிவுட் படத்தின் வெளியீட்டு விழாவில் பாலிவுட் சினிமாவில் நடிகைகளை மரியாதையுடன் நடத்துகிறார்கள். நடிகைகளின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஆனால் நான் இதற்கு முன்பு நடித்த தெலுங்கு படங்களில் எனக்கு இப்படியான மரியாதை கிடைக்க வில்லை. எல்லோரும் என்னுடைய இடுப்பை தான் பார்த்தார்களே தவிர என்னுடைய நடிப்பை பார்க்கவில்லை.
அதிலும் இயக்குனர் ஒருவர் என்னுடைய தொப்புளில் தேங்காயை உடைத்து ஊற்றி சில காட்சிகளை படமாக்கினார். படத்தில் ஒப்பந்தம் ஆகி விட்டோமே என்று அந்த காட்சிகளில் நடித்தேன்.
என்னுடைய தொப்புளில் இன்னும் என்னென்ன கொடுமை எல்லாம் செய்யப் போகிறார்களோ..? என்ற யோசனை தான் எனக்குள் இருக்கும் என பேசினார்.
நடிகை இலியானாவிற்கு மார்க்கெட் உருவாக்கி அவருடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது தெலுங்கு சினிமா படங்கள் தான்.
ஆனால், தன்னை உயர்த்திவிட்ட தெலுங்கு சினிமா படங்களை தெலுங்கு சினிமா இயக்குனர்களை டேமேஜ் செய்யும் விதமாக நடிகை இலியானா பேசியது. மிகப்பெரிய கொந்தளிப்பை தெலுங்கு சினிமா இயக்குனர்கள் மத்தியில் உருவாக்கியது.
அதன் பிறகு அவருக்கு பாலிவுட் படங்களிலும் வாய்ப்பு குறைந்து காதல் தோல்விக்கு பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்க வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..? என்று எந்த இயக்குனரும் நடிகை இலியானாவுக்கு பட வாய்ப்பு தர முன் வரவில்லை. இதனால் தற்போது படங்களில் நடிக்காமல் இருக்கிறார் நடிகை இலியானா.