பக்கா குடும்ப பாங்கினியாக மாறிய சிவாங்கி... வாயடைத்துப்போன ரசிகர்கள்!
சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி செம கியூட்டான சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணைத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் தான் சிவாங்கி.

பாடகியாக அறிமுகமாகிய சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டாக்டர் திரைப்படத்தில் சிவாங்கி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார்.

தற்போது மேடை நிகழ்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் சிவாங்கி COMPOSER ஆகவும் களமிறங்கியுள்ளார் அவரே COMPOS செய்து பாடி, நடித்துள்ள ஆல்பம் பாடல் வெளியாகி தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சிவாங்கி ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை மொத்தமான கவரும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.