நடிகை லட்சுமி மேனனா இது? இப்படி குண்டாகி ஆளே மாறிட்டங்க..வீடியோ
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி போன்ற வெற்றிப்படங்களில் தன்னுடைய சிறுவயதில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
10ஆம் வகுப்பு படிக்கும்போது சினிமாவில் அறிமுகமாகிய லட்சுமி மேனன், அவ்விரு படங்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதன்பின் 5 ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் படிப்பில் கவனம் செலுத்தியப்பின் மீண்டும் புலிக்குத்தி பாண்டி, சந்திரமுகி 2, சப்தம் போன்ற படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு மதுபாரில் சிலருடம் சண்டையிட்டு சிக்கலில் சிக்கி ஆளே காணாமல் போனார்.
தற்போது உடல் எடையை ஏற்றி, ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகியது.
Case லாம் முடிச்சிட்டாங்களா ?
— TamilaninCinema Akilan (@TamilaninCinema) February 22, 2026
நல்லாருந்தா சரி 😆 pic.twitter.com/TBnOsOo0jo
லட்சுமி மேனனை பார்த்த பலரும் கும்கி ஹீரோயினா இவங்க என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள். யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் மலை என்ற படத்தில் முக்கிய ரோலில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.