அதுக்காக தான் தினமும் குடிக்கிறேன்..ஆனா!! சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி..

அதுக்காக தான் தினமும் குடிக்கிறேன்..ஆனா!! சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி..

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் மெட்டி ஒலி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கிருத்திகா அண்ணாமலை. அந்த சீரியலை தொடர்ந்து செல்லமே, வம்சம், கேளடி கண்மணி, ராஜா ராணி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் வில்லி ரோலில் நடித்து வருகிறார்.

அதுக்காக தான் தினமும் குடிக்கிறேன்..ஆனா!! சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி.. | Krithika Has Stated That She Drinks Wine Every Day

சமீபத்தில் கிருத்திகா அண்ணாமலை அளித்த பேட்டியொன்றில், மெட்டி ஒலி சீரியலில் நடித்தபோது ஒரு நாளைக்கு எனக்கு ரூ.750 சம்பளம். அதன்பின் ஏவிஎம் சீரியலில் நடித்தபோது ஒரு நாளைக்கு 500 ரூபாய் தான் வாங்கினேன்.

தற்போது இரண்டு சீரியலில் நடித்து வருகிறேன், மல்லி சீரியலில் 10 ஆயிரம் ரூபாயும், கார்த்திகை தீபம் சீரியலில் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்.

அதுக்காக தான் தினமும் குடிக்கிறேன்..ஆனா!! சீரியல் நடிகை கிருத்திகா பேட்டி.. | Krithika Has Stated That She Drinks Wine Every Day

நடிக்க வந்தப் பின்தான் சரக்கு அடிக்கும் பழக்கம் வந்தது. நடிக்க வந்த புதிதில் ஒயின் குடித்தால் ஸ்கின் நல்லா பளபளவென க்ளோவாக இருக்கும் என்று சொன்னார்கள். ஒரு நடிகைக்கு ஸ்கின் தானே முக்கியம் என்பதால் முதன்முதலாக ஒயின் குடித்தேன்.

தினமும் தூங்கும்போது கொஞ்சமாக ஒயின் குடித்துவிட்டு தூங்கினால் நிச்சயமாக நல்ல க்ளோ இருக்கும். ஆனால் சிலர் அதை அப்படியே ஒரே அடியாக குடித்துவிடுகிறார்கள். அப்படி அதிகமாக குடித்தால் பலன் தராது. என்னுடைய 22வது வயதில் தான் ஒயின் குடிக்கிறேன். எப்போதாவது பார்ட்டிக்கு சென்றால் சரக்கு அடிப்பேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் கிருத்திகா.

LATEST News

Trending News