இந்த சண்டே சன் டிவியில் விஜய் பட ஸ்பெஷல்... என்ன படம் ஒளிபரப்பாக போகிறது தெரியுமா?

இந்த சண்டே சன் டிவியில் விஜய் பட ஸ்பெஷல்... என்ன படம் ஒளிபரப்பாக போகிறது தெரியுமா?

சன் டிவி

இந்த காலத்தில் ஒரு படம் பார்க்க பல வழிகள் உள்ளது.

ஆனால் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு எல்லாம் புதுப்படங்கள் பார்க்க வேண்டும் என்றால் திரையரங்கை தாண்டி சன் டிவியில் தான் பார்க்க முடியும்.

அதேபோல் பிரபலங்கள் பேட்டி, ரியாலிட்டி ஷோக்கள் என்றாலும் சன் டிவி தான் இருந்தது. இப்போது சன் டிவிக்கு நிகராக போட்டிபோட பல தொலைக்காட்சிகள் வந்துவிட்டது, ஆனாலும் சன் டிவிக்கான கிரேஸ் மக்களிடம் போகவில்லை என்று தான் கூற வேண்டும்.

 

சண்டே ஸ்பெஷல்

திரையரங்குகளில் வாரா வாரம் படம் ரிலீஸ், ரீ-ரிலீஸ், ஓடிடி ரிலீஸ் என படங்களை மக்கள் கண்டு வந்தாலும் சன் டிவியில் ஞாயிறு ஆனால் ஸ்பெஷலாக மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் படத்தை ஆர்வமாக காணும் ரசிகர்களும் உள்ளார்கள்.

சன் டிவியிலும் கடந்த சில வாரங்களாக முன்னணி நடிகர்களின் செம ஹிட் படங்கள் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரம் அதாவது ஜுலை 5ம் தேதி சண்டே ஸ்பெஷலாக மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் விஜய்யின் சூப்பர் ஹிட் படமான பிகில் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES