தனுஷுக்காக அனிருத் திருமண வரவேற்பை புறக்கணித்தாரா ஐஸ்வர்யா? வெளியான ஒரே புகைப்படம்... ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!

தனுஷுக்காக அனிருத் திருமண வரவேற்பை புறக்கணித்தாரா ஐஸ்வர்யா? வெளியான ஒரே புகைப்படம்... ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்பான விவாதம் மீண்டும் இணையத்தில் சூடுபிடித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண வரவேற்பில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் பரவிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களின் கணிப்புகளை மாற்றியுள்ளது.

அனிருத் தனது திரையுலக இசைப் பயணத்தை நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான '3' திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். அந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகளவில் பிரபலமானதுடன், தனுஷ் - அனிருத் கூட்டணியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண வரவேற்புக்கு தனுஷுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியானது. இதனால், தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது முன்னாள் கணவருக்காக அனிருத் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளவில்லை என்று சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவின.

மேலும், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே விவாகரத்துக்குப் பின்னரும் பரஸ்பர மரியாதை நீடிப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

வெளியான புகைப்படத்தால் மாறிய கதை!

இந்நிலையில், ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிருத் திருமண வரவேற்பு தொடர்பான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இடம்பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது உறுதியாகியுள்ளது. அவருடைய புகைப்படங்கள் இதற்கு முன்னர் வெளியாகாததால், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என ரசிகர்கள் தவறாக நினைத்துள்ளனர்.

தற்போது இந்தப் புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, தனுஷுக்காக ஐஸ்வர்யா நிகழ்ச்சியைப் புறக்கணித்தார் என்று நினைத்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இதனால் அனிருத் திருமண வரவேற்பு தொடர்பான விவாதம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

LATEST News

Trending News