அண்ணனுக்கு டஃப் கொடுத்த அண்ணி.. அனிருத் ரிசப்ஷனுக்கு சங்கீதா அணிந்திருந்த உடை எவ்வளவு தெரியுமா?
சென்னை: முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்தே அவருடைய ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அவருடைய ஆடை அலங்காரம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வருகிறது. அரசியலில் நுழைந்தபோது அவர் அணிந்திருந்த காக்கி பேண்டும் வெள்ளை நிற சட்டையும் ட்ரெண்டான நிலையில், முதலமைச்சரான பிறகு கருப்பு நிற கோட் சூட்டிலும் கம்பீரமாக வலம் வந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் அணிந்து வந்திருந்த ராகவேந்திர ரத்தோர் நேவி ப்ளூ சூட்டின் மதிப்பு ₹3 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகம் என்ற தகவல் வெளியானது. அதே சமயம், நீண்ட நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாமல் இருந்த சங்கீதாவும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தனித்தே வருகை தந்து மணமக்களை வாழ்த்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.