நீ அம்மா என்று அழைத்த தருணம்.. சனந்த் பற்றி டோரதி நடிகை உருக்கம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ள 'டோரதி' திரைப்படத்தில் நடித்த நடிகை ஜீவா சுப்ரமணியத்தின் உருக்கமான சமூக வலைத்தளப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருநங்கையான ஜீவா சுப்ரமணியம், திரைப்படங்களில் நடிப்பதுடன் பல்வேறு கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டவர். இந்நிலையில், 'டோரதி' திரைப்படத்தின் மூலம் தனக்குக் கிடைத்த அன்பு மற்றும் ஆதரவு குறித்து அவர் பலமுறை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படத்தில் நடித்த சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் தன்னைத் தங்களது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டு அன்புடன் நடத்தியதாக ஜீவா தெரிவித்துள்ளார்.
மேலும், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் தன்னிடம் காட்டிய பாசமும், தன்னை ஒரு தாயாக ஏற்றுக்கொண்ட விதமும் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவது மகிழ்ச்சியான விடயம் என்றாலும், அந்தப் பயணத்தில் அன்பான மனிதர்களைக் குடும்பமாகப் பெற்றிருப்பது அதைவிடப் பெரிய வரம் என்றும் ஜீவா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தற்போது அவரது இந்த உருக்கமான பதிவானது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.