நீங்கள் டாக்சிக் உறவில் இருந்தால், உடனடியாக விலகிவிடுங்கள்! பிக் பாஸ் வின்னர் அர்ச்சனா பேட்டி
bigg boss archana ravichandran about toxic relationship: பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா சமீபத்திய பேட்டி ஒன்றில் டாக்சிக் உறவு குறித்தும், அதிலிருந்து விலகுவதுதான் சரியான முடிவு என்பதை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியது என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அர்ச்சனா
தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஒருவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா, சிறப்பாக விளையாடி டைட்டில் வின்னராக ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து டிமாண்டி காலனி 2, லெனின் பாண்டியன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் ஆக்டோபஸ் எனும் வெப் சீரிஸ் ஜீ5-ல் வெளியாகிறது.
மனம் திறந்து பேசிய அர்ச்சனா
நடிகை அர்ச்சனா ஆக்டோபஸ் வெப் சீரிஸ் ப்ரோமோஷன் பேட்டியின்போது, டாக்சிக் உறவு குறித்து மனம் திறந்து பேசினார்.
இதில் "நீங்கள் டாக்சிக் உறவில் இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், உடனடியாக அந்த உறவிலிருந்து விலகுங்கள். சரியாக நேரத்தில் சரியான முடிவை எடுப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நாம் ஒரு நச்சுத்தன்மை கொண்ட உறவில் இருக்கிறோம் என்பதை உணர்வதே கடினம் என்பது எனக்கு தெரியும். எனவே, ஆரம்பத்திலேயே அதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை கண்டறிந்து விழிப்புடன் இருங்கள்" என கூறினார்.
நடிகை அர்ச்சனா பேசிய இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.