கங்கனா ரணாவத்தின் புதிய திகில் படம் – முதல் பார்வையிலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

கங்கனா ரணாவத்தின் புதிய திகில் படம் – முதல் பார்வையிலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தற்போது புதிய திகில் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். ‘Scary Picture’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டகுபதி தயாரிக்கிறார்.

தெலுங்குத் திரைப்பட இயக்குநர் ரவி பாபு இப்படத்தை இயக்குகிறார். இது அவருடைய முதல் இந்தித் திரைப்பட இயக்கமாகவும் அமைகிறது.

இப்படம் குறித்து பேசிய ராணா டகுபதி, வழக்கமான திகில் படங்களைப் போல இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தையும் அனுபவத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டும் கங்கனா ரணாவத், இந்தத் திரைப்படத்தில் எவ்வாறு ரசிகர்களை அச்சுறுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.

LATEST News

Trending News