ராமாயண படப்பிடிப்பில் கண்ணீர் விட்டு அழுத சாய் பல்லவி! நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த நடிகை!
நடிகை சாய் பல்லவி, 'ராமாயணம்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இப்படத்தில் சீதையாக நடிக்கும் சாய் பல்லவி, தனது கதாபாத்திரத்திற்காகப் பேச்சு வழக்கைப் பயிற்றுவித்த மொழிப் பயிற்சியாளர் ஒருவர் படப்பிடிப்புத் தளத்தில் தனது கால்களைத் தொட்டு வணங்கியதாகக் கூறியுள்ளார்.
எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாகவும், அந்தத் தருணம் தன்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ராமாயணம் படப்பிடிப்பில் தனக்குக் கிடைத்த இந்த அன்பான அனுபவம் குறித்து அவர் பகிர்ந்த தகவல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.